சந்திரன், செவ்வாய்க்குச் செயற்கைகோள்களை அனுப்பும்போது, ஒவ்வொரு விநாடியிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக, செவ்வாய்க் கோள் சராசரியாக விநாடிக்கு 34.கி.மீ வேகத்தில் நகருகிறது. ஆகையால் செவ்வாய்க்கு பயணம் செய்த அந்தச் செயற்கைகோள், தனது பயணத்தை 9 மாதங்களுக்கு முன்னரே தொடங்கியது. நேரம், பாதை, வேகம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஏதேனும் ஒன்றில் தவறு நேர்ந்தாலும் திட்டம் தோல்வியில் முடியும் வாய்ப்புள்ளது. இதேபோல், கல்விக்கும் சரியான நேரம், பாதை, வேகம் ஆகிய மூன்றும் பொருந்தும். கல்வியில் வெற்றிப் பெற இந்த மூன்றும் மந்திரங்களும் தேவைப்படுகின்றன. இன்றையச் சூழலில் வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மூன்று மந்திரங்கள் உறு துணையுடன் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, குறிக்கோள்களை எளிதாக அடைய முடியும்.
|