பேச்சு:தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்
(பேச்சு:தமிழ்ப் பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic பழமொழி இலக்கியமும், காலமும்
போல என் முடிவடைவது உவமை அணி என நினக்கிறேன் --kalanithe
நம்பகத்தன்மை
தொகுஇவை பழமொழிகள் தான் என்பதற்கு ஆதாரம் உண்டா? அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான். என்பதை எல்லாம் யார் பழமொழி ஆக்கினார்கள் என்று டுவிட்டரில் ஒரு நண்பர் வினவினார்--ravidreams 16:35, 12 பெப்ரவரி 2012 (UTC)
- இது சொலவடையாகும். பல சொலவடைகள் மக்கள் பயன்பாட்டினால் பழமொழி ஆவதுண்டு. இரண்டிற்கும் இடையே ஆன வேறுபாடுகளை களைந்து தீர்க்கமான இலக்கணத்தினை வகுக்கும் பொழுது இவை புரிபடும் நன்றி. -Jagadeeswarann99 (பேச்சு) 07:01, 10 ஜூலை 2013 (UTC)
பழமொழிகள் என்றால் புரிகிறது..சொலவடை என்றால் புரியவில்லையே!இந்த சொலவடை என்னும் சொல்லே புதிய ஆக்கமோ?...விளக்குவீரா?--Jambolik (பேச்சு) 19:06, 5 நவம்பர் 2013 (UTC)
- அனைவருக்கும் வணக்கம் பழமொழிகளைத் தொகுக்கும் பங்களிப்பாளர் கவனத்திற்கு விக்கிமேற்கோள் பக்கத்தில் முதற்பக்கத்தில் பழமொழிகள் என பொதுவான (பல பிற மொழிகள்) https://ta.wikiquote.org/s/nu ஒரு பக்கமும் இடது பக்கம் பழமொழிகள் https://ta.wikiquote.org/s/f3 என்னும் பக்கமும் இருக்கின்றது பொதுவாக பங்களிப்பாளர்கள் அனைவரும் இரண்டிலும் தொகுத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதை மாற்றி ஏதாவது ஒரு பக்கமாக அதில் மட்டுமே தொகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 05:37, 6 செப்டம்பர் 2020 (UTC)
பழமொழி இலக்கியமும், காலமும்
தொகுஇலக்கியம் மக்களின் அன்றைய சூழலின் வெளிப்பாடு. அது பழமொழியில் வெளிப்படுதல் இயல்பே. இப்படியிருக்க நம்பகத்தன்மையை எண்ண வேண்டாம் .அது மற்றொரு இலக்கிய வடிவில் பொதிந்து இருப்பதை ஆய்வில் அறிஞர் கூறுகின்றனர்--தகவலுழவன் (பேச்சு) 09:04, 8 மே 2017 (UTC)