பிரெட்ரிக் ஜேம்சன்

பிரெட்ரிக் ஜேம்சன் (Fredric Jameson பிறப்பு: 14-ஏப்பிரல்-1934) அமெரிக்காவைச் சேர்ந்த இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் மார்க்சிய அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். தற்காலக் கலாச்சாரச் சூழல்களைப் பற்றிய ஆய்வுகளுக்காகப் புகழ் பெற்றவர் இவர்.

Fredric Jameson (2004)

மேற்கோள்கள்

தொகு
  • ஒப்பீட்டளவில் நாம் இப்போது கொண்டிருப்பது அடையாளமற்ற, ஆனால் அமைப்புரீதியான கலாச்சாரமாகும்.
  • பின்நவீனத்துவம் குறித்துப் பேசும்போது, செவ்வியல் நவீனத்துவம் என்றால் என்ன, உயர் நவீனத்துவம் என்றால் என்ன என்ற கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால், செயல்போக்கில் நவீனத்துவத்தை முற்றுப்பெற வைத்த ஒரு நிலைமையாகும் அது. அதாவது, பழைய மிச்சசொச்சங்கள் எல்லாம் எடுத்தெறியப்பட்ட நிலைமையாகும்.
  • நவீனத்துவம் கலையின் சுயாதீனத்தைக் கோரியது. மேதமை கோரிய கருத்தியலை முன்வைத்தது.
  • அரசியல் பற்றிய எனது உணர்தலானது பழைய மாதிரியைக் கொண்டிருப்பதாகத் தோன்றும். குழுக்களுக்கிடையில் அடிப்படையான ஒன்றுபடலுக்கான மறுஆக்கம் நிகழாமல் இறுதியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனது சொந்த உணர்தல் மிகுந்த அவநம்பிக்கை வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியில் ஒன்றுபடுதல் எனும் அம்சத்தை வைத்துப் பார்க்கிறபோது, கலாச்சாரம் என்பது அரசியலுக்கான மாற்றுவழி அல்ல. மாறாக, கலாச்சாரம் அரசியலில் குறுக்கீடு செய்ய வேண்டும். பல்வேறு சிறு குழுக்கள் தமது தனிப்பட்ட வித்தியாசங்களுக்காக அதிகாரம் வாய்ந்த கலாச்சார பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்களானால், அப்புறம் பின்னால் ஒன்றுபடுதல் என்பதற்கான சாத்தியமே இல்லாது போய்விடும். அதிகமாக கலாச்சார அரசியல் பேசுவதை அவநம்பிக்கையுடன்தான் நான் பார்க்கிறேன்.
  • நான் சொல்லும் இந்த ஆளும் வர்க்கம் என்பதை அரசு என்று சொல்லாமல் இருப்பது நல்லது. இனி இதை கார்ப்பரேட் என்று சொல்வது பொருத்தமான வார்த்தையாக இருக்கும். ஆனால் இந்த கார்ப்பரேட் என்பது பழைய அர்த்தத்தில் ஆளும் வர்க்கம் என்று சொல்ல முடியாது. இதன் காரணம் தனிநபர் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். இவ்வாறுதான் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை என்பதை உருவாக்கத் தொடங்க வேண்டும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரெட்ரிக்_ஜேம்சன்&oldid=37552" இலிருந்து மீள்விக்கப்பட்டது