பயிற்சி என்பது தொழில் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்க ஏற்கனவே அத்தொழிலில் திறன் பெற்றவர்களால் வழங்கப்படும் தகவல் அல்லது திறன் பரிமாற்றம் ஆகும். பயிற்சி வழங்கப்படுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  • அறிவுப் பயிற்சியின் முதன்மையான நோக்கம் மனிதனுக்கு நிறைந்த அறிவையளிப்பதும், அவன் மனத்தைப் பூரணமாக அடக்கிக்கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதுமாகும். - நோவாலிஸ்[1]
  • அரைகுறைப் பயிற்சி ஆடம்பரத்தை உண்டாக்கும்: தீவிரப் பயிற்சி எளிய வாழ்வை உண்டாக்கும். போவீ[1]
  • சாதாரண அறிவுள்ள ஒரு மனிதன் பயிற்சியினாலும் கவனத்தினாலும் உழைப்பினாலும் தான் விரும்புவது போன்ற எந்த நிலையையும் அடைய முடியும். ஆனால், கவிஞனாவது மட்டும் வேறு கலையாகும். - செஸ்டர்ஃபீல்டு[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 255-256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயிற்சி&oldid=26996" இலிருந்து மீள்விக்கப்பட்டது