காமக்கூர் கோவில்

http://img29.imageshack.us/img29/8648/kamakkur.jpg http://img171.imageshack.us/img171/8648/kamakkur.jpg http://img547.imageshack.us/img547/7242/kamakkur2.jpg

அருள்மிகு சந்திரசேகரசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) காமக்கூர் (காமத்தூர்)-606903,வேலூர் குன்னத்தூரிலிருந்து 2கிமீ

=================
தொகு

திருப்புகழ் - பாடல் 988 - காமத்தூர்

ராகம் - ....; தாளம் -


தானத் தானத் தானத் தானத் தானத் தானத் ...... தனதானா


ஆகத் தேதப் பாமற் சேரிக் கார்கைத் தேறற் ...... கணையாலே

ஆலப் பாலைப் போலக் கோலத் தாயக் காயப் ...... பிறையாலே

போகத் தேசற் றேதற் பாயற் பூவிற் றீயிற் ...... கருகாதே

போதக் காதற் போகத் தாளைப் பூரித் தாரப் ...... புணராயே

தோகைக் கேயுற் றேறித் தோயச் சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா

சோதிக் காலைப் போதக் கூவத் தூவற் சேவற் ...... கொடியோனே

பாகொத் தேசொற் பாகத் தாளைப் பாரித் தார்நற் ...... குமரேசா

பாரிற் காமத் தூரிற் சீலப் பாலத் தேவப் ...... பெருமாளே.


உடலிலே வந்து குறி தப்பாமல் தைக்கின்ற (மன்மதனுடைய) கையில் உள்ள கரும்பு வில்லினின்று புறப்படும் மது நிறைந்த மலர்ப் பாணங்களாலும், விஷம் கொண்டதாய், பால் போலும் வெண்மையானஅழகு வாய்ந்த வடிவம் உடைய நிலவாலும், புணர்ச்சி இன்பத்தில் ஆசைப்பட்டு, தன் படுக்கையில் நெருப்புப்பட்ட பூவைப்போலக் கருகிப் போகாமல், அவள் பிழைத்துப் போகும்படி, ஆசை வைத்துள்ள இன்பத்துக்கு இடமான (உனது) திருவடியில் (என் மகள்) மகிழ்ச்சி அடைய, நன்கு அவளைச் சேர்ந்து அருள மாட்டாயா? (இந்திரனாகிய) மயில் மேல் பொருந்தி ஏறி, கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து ஓடும்படி போர் செய்த வேலனே, சூரியன் காலையில் உதிக்கும்படிக் கூவுகின்ற, அந்த இறகு உடைய கோழிக் கொடியை உடையவனே, சர்க்கரைப் பாகுக்கு ஒத்த இனிமையான சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமரேசனே, இந்த உலகத்தில் காமத்தூர் என்னும் தலத்தில் தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே.

இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி எனும் சிற்றூரால் காமக்கூர் என்ற இடம் உள்ளது .இங்கு உள்ள ஒரு சிவன் ஆலயத்தின் பெயர் ஸ்ரே சந்திரசேகர ஸ்வாமி என்பது. அதில் மூலவருடன் உள்ளவள் அமிர்தாம்பிகை என்று கூறப்படுகிறாள். அதில் தேவி காமாஷியின் சன்னதியும் உள்ளது. இத ஆலயம் காமாஷியுடன் சம்மந்தப்பட்டு உள்ளதினால் அங்குள்ள நதியின் பெயர் காம நதி என்று இருந்துள்ளது. அந்த ஆலயத்து ஸ்தல புராணமும் காம நகர் புராணம் என்று தலைப்பிட்டுக் கொண்டு உள்ளது. ஆகவே காமத்தூர் மற்றும் காமக்கூர் என்ற இரண்டும் ஒன்றேதான் என்பது தெளிவாகிறது. இந்த புராதான ஆலயம் சோழர்கள் காலத்தை சேர்ந்தது. அதில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஒரு மயில் மீது அமர்ந்து கொண்டுள்ள காட்சியில் காணப்படும் ஷண்முகனுக்கு ஆறு முகம், மற்றும் பன்னிரண்டு கைகளும் உள்ளன. இதைப் போன்ற ஷண்முகன் தேவிகாபுரத்தில் உள்ள கனககிரி ஆலயத்திலும் காணப்படுகிறார். இந்த ஆலயக் குறிப்பும் திருப்புகழில் காணப்படுகிறது
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gokul2500&oldid=6751" இலிருந்து மீள்விக்கப்பட்டது