நாடு
வெவ்வேறு அரசியல் தன்மைகளையும் பிரிவுகளையும் கொண்டு, தனியலகாக செயற்படும் ஒரு புவியியற் பகுதி
அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் அரசு (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று. - ஔவையார்
- எந்த ராஜ்யத்திலே தீயோர் ஆதிக்கம் பெறாமல், நல்லோர் தலைமையில் உளரோ, அந்த ராஜ்யம் நன்கு அமைந்ததாகும். - பிட்டாகஸ்[1]
- சுதந்தரமான நாட்டில் கஷ்டம் குறைவு. ஆனால், சத்தம் அதிகமாயிருக்கும். எதேச்சாதிகாரமுள்ள ராஜ்யத்தில் கஷ்டம் அதிகமாயிருக்கும். குற்றம் சொல்வது குறைவாயிருக்கும். - கருவோட்[1]
- அந்நிய நாட்டினர் நிலவிற்குச் செய்து அனுப்பிக் கொண்டிருக்க இறந்த தந்தைக்குப் பார்ப்பானிடம் அரிசி, பருப்பு அனுப்பி அழுது கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.[2]
- ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை, அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பதாகும்.[2]
- ஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை (இட ஒதுக்கீடு) அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும்.[2]
- துருக்கியில் கமால்பாட்சாவும், ஆப்கானிஸ்தானில் அமீரும் நாத்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தம்தான் காரணம்.[2]
- நம் நாட்டில் புதிதாக ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகம் பற்றிக் கேட்போம். ரசியாவிலோ, 'சமுதாய சேவை என்ன' என்றுதான் கேட்பார்கள்.[2]
- நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.[2]
- நம் நாட்டைப் பாரத தேசம் என்று சொல்வது ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை.[2]
- வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத்தின்னது. இது போன்றதே பார்ப்பனர் தன்மை.[2]
- இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால் அவனுக்கு முதலில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனைதான் முன் நிற்கும்.[2]
- நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?.[2]
- நாடு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்ட வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. நிலத்தின் இயற்கைத் தன்மையினினின்றும் முகிழ்ந்த வாழ்க்கை. அரசு, கலவி, தொழில், நாகரிகம் முதலியனவும் சேர்ந்த ஒன்றே நாடு என்பது.[3]
- தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, முழுக்க முழுக்கப் பிறரை நம்பியிருக்கும் ஒரு நாடு உதவாக்கரை நாடாகும். (27-11-1962)[4]
- இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு. சுபாஷ் சந்திர போஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள், உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள். பிரான்சு, ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன. எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது.
- ஜவகர்லால் நேரு (20.5-1928) (பம்பாயில்)[5]
- விடுதலை பெற்ற நாடுகளின் நிலை, அந்நாட்டு மக்கள் கையில்தான் உள்ளது. நாடு பெருமை பெற வேண்டிய கட்டாயம் அதன் புகழ், அந்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது. -[6]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
- ↑ புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ 7.0 7.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
வெளி இணைப்புகள்
தொகு