தமிழர்

தமிழ் இனம்

தமிழர் (ஆங்கில மொழி: Tamil, Tamils, Tamilians) என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • தமிழர் என்பவர் தமிழைத் தாய்மொழியாக உடையவர் ஆவர். தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆக மாட்டார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. —கா. சு. பிள்ளை, 1937 ஆம் ஆண்டு திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாட்டைத் துவக்கி வைத்து போசியபோது.
  • நபியை நினைப்பவன் எப்படி முகம்மதியனாகிறானோ, ஏசுவை நினைப்பவன் எப்படி கிறிஸ்துவனகிறானோ, அதுபோல வள்ளுவனை நினைப்பவன்தான் தமிழன்.—க. அன்பழகன்(4-7-1960)[1]
  • தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் இழந்தான். —ஈ. வெ. இராமசாமி
  • அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டுமென்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடையார் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன். தமிழ் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும், அவற்றில் பழகல் வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல் தமிழரென்று வெளிக்குக் கூறிக் கொள்வோருக்கு வெட்கமில்லை யென்றே நான் கூறுவேன். —ஞானியாரடிகள் (கந்தர் சஷ்டிச் சொற்பொழிவில்)[5]

சான்றுகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்
  3. The Madras Presidency is the habitat of that Tamil race whose civilisation was the most ancient, and a branch of whom, called the Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very ancient times; whose astrology, religious lore, morals, rites, etc., furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and whose mythology was the source of the Christian Bible. Another branch of these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful Egyptian civilisation, and the Aryans also are indebted to this race in many respects.
  4. Vivekananda. MEMOIRS OF EUROPEAN TRAVEL. http://www.ramakrishnavivekananda.info. 
  5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தமிழர்&oldid=38072" இலிருந்து மீள்விக்கப்பட்டது