வாசிங்டன் இர்விங்

வாசிங்டன் இர்விங் (Washinton Irving) (ஏப்ரல் 3, 1793 - நவம்பர் 28, 1859) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ரிப் வான் விங்கிள் (1819) மற்றும் தி லெஜென்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ (1820) போன்ற தனது புகழ் பெற்ற சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார். ஜார்ஜ் வாசிங்டன், ஆலிவர் கொல்ட்ஸ்மித், முகமது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கிரிஸ்டொபர் கொலம்பஸ், சோனகர்கள் மற்றும் ஆலம்பரா ஆகியோரைப் பற்றிய வரலாறுகள் இவரது வரலாற்றுப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவர் 1842 முதல் 1846 வரை ஸ்பெய்னின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  • அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும்.
  • நாவடக்கம் : உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே.[1]
  • தலைசிறந்த அழகியைக்காட்டிலும், புற அழகிலே குறைந்த, ஆனால், அறிவும் புத்திக் கூர்மையும் மிகுந்த ஒரு பெண் என்னை அதிகமாய்க் கவர்ந்துவிடுகிறாள் உள்ளேயிருக்கும் தெய்வத் தன்மையே வெளியேயுள்ள தெய்வத் தன்மைக்குக் காரணமாயுள்ளது.[2]
  • அன்புள்ள இதயத்தின் ஊற்று. அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும்.[3]

சான்றுகள்

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வாசிங்டன்_இர்விங்&oldid=19714" இலிருந்து மீள்விக்கப்பட்டது