உலகம்
உலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.
மேற்கோள்கள்
தொகு- நாம் வசிக்கும் இந்த உலகம் அழகானது. அருள் பெற்றது உயிருள்ளவரை இதை அனுபவிப்பதை இழந்துவிடுதல் பாவமாகும். --சேம்பர்ஸ்[1]
- உலகை நம்பாதே. அது வாக்களிப்பதை ஒரு போதும் அளிப்பதில்லை. -அகஸ்டின்[1]
- ‘உலகம்' என்பது ஒரு சங்கேதச் சொல். அதன் பொருள் அதிலுள்ள அயோக்கியத்தனம் அனைத்தும் - டிக்கென்ஸ்[1]
- உலகம் என்ற நாட்டைப்பற்றி விளக்கத்தைக்கொண்டு தெரிந்துகொள்ள முடியாது: ஒருவர் தாம் அதில் யாத்திரை செய்து பழகியே தெரிந்துகொள்ளல் வேண்டும். -செண்டர்ஃபீல்ட்[1]
- சிந்தனை செய்பவர்களுக்கு உலகம் ஓர் இன்பியல் நாடகம். அதை உணர்பவர்களுக்குத் துன்பியல் நாடகம்,-ஹோரேஸ் வால்போல்[1]