சார்லஸ் டிக்கின்ஸ்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை ஆகும்.

கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!

மேற்கோள்கள்

தொகு
  • கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!
  • பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!
  • தலைக்கென்று ஒரு ஞானம் உள்ளது இதயத்தின் ஞானம் எனவும் ஒன்று உள்ளது!!!
  • குதுகலமும் திருப்தியும் சிறந்த அழகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை. [1]
  • வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும்.[2]
  • தீயவர் நம்மை நேருக்கு நேராக நின்று பார்க்கக் கூகவர் என்றெல்லாம் அறிவில்லாமல் பேசப்படுகின்றது. அந்தக் கருத்தை நம்ப வேண்டாம். ஆதாயம் ஏதேனும் கிடைக்குமானால், வாரத்தில் எந்த நாளிலும் அயோக்கியதை நம்மை ஏறிட்டுப் பார்த்து. நேர்மையைக்கூட விரட்டிவிடும்.[3]
  • தாயின் நற்குணங்களும். தந்தையின் பாவங்களும் குழந்தைக்கு வந்து சேரும் என்று எங்காவது எழுதி வைத்தல் நலம்.[4]
  • உலகைப்பற்றிய அறிவு என்பதன் பொருள். மனிதர்களின் குறைபாடுகளை அறிதல் என்பதுதான். [5]

குறிப்புகள்

தொகு
  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 40-41. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 81-82. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 127-128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சார்லஸ்_டிக்கின்ஸ்&oldid=20481" இலிருந்து மீள்விக்கப்பட்டது