வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பணம் சம்பாதிப்பதற்காக ஒரு நபர் செய்யும் செயல்பாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"== மேற்கோள்கள் == * மாபெரும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:27, 7 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

மேற்கோள்கள்

  • மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! - அம்பேத்கர்
  • வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்
  • உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். — கார்ல் மார்க்ஸ்.

உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி

எமர்சன்

  • சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்.
  • திறமைதான் ஏழையின் மூலதனம்.

ஹென்றி போர்டு

  • சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்.
  • உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.

சுவாமி விவேகானந்தர்

  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
  • பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

சான்றுகள்

  1. http://tamilcube.com/res/tamil-quotes.aspx

index.php

"https://ta.wikiquote.org/w/index.php?title=வேலை&oldid=14843" இலிருந்து மீள்விக்கப்பட்டது