சமூகம்

(சமுதாயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமூகம் (Society) என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம்.

  • "ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அத் தனித்துவத்தின் சிறப்புகள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும். அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும்."
    • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை, கட்டுரை: யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  • பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம், ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் ‘குற்றம் செய்கிறாய்!’ என தண்டிக்க வருகிறது. இது தான் சமூகம்! -புதுமைப்பித்தன்[1]
  • வாழ்க்கைப் பாதையில் கணவனும், மனைவியுமாகச் செல்லுகையில், மஞ்சள் பூப் போல் இருந்த சமூகம், பந்துக்கள் அவன் பிரிந்தவுடன், முட்களாகக் குத்துகிறார்கள். -புதுமைப்பித்தன்[1]
  • தனிமனிதன் உயிருடன் வாழ முடியாது; அதாவது தனியாக இருந்தால் மனிதனால் வாழ முடியாது என்பது மனிதப் பிராணிகள் கஷ்டப்பட்டு அறிந்த உண்மை.-புதுமைப்பித்தன்[1]
  • அறிவைக்கொண்டு நாம் மனிதர்களுடன் பழகுவதைக்காட்டிலும் இதயத்தைக்கொண்டு பழகுவதில் அதிக நெருக்கமாயுள்ளது. - புருயெர்[2]
  • கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வு சுகமாக இராது. - ஷேக்ஸ்பியர்[2]
  • சிறுவிஷயங்களில் மாறுபட்டும். பெரிய விஷயங்களில் ஒற்றுமைப்பட்டும் இயங்குவதே சமுதாயம்.[2]
  • நான் ஒரு மனிதன், மனித சமூக சம்பந்தமான எந்த விஷயத்திலும் எனக்கு அக்கறை உண்டு. - டெரன்ஸ்[3]
  • நமக்குள்ளே இயங்கும் தெய்வத்தன்மை இல்லாவிட்டால், மனித சமூகத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? - பேக்கன்[3]
  • மனிதனிடம் அதிக மிருக இயல்பும், சொற்பமான சைத்தானின் இயல்பும் இருப்பது போலவே, அவனிடம் கொஞ்சம் தெய்வத் தன்மையும் இருக்கின்றது. மிருக இயல்பையும் சைத்தான் இயல்பையும் வெல்ல முடியுமே தவிர, இந்தப் பிறவியில் அவைகளை முழுதும் அழித்துவிட முடியாது. - காலெரிட்ஜ்[3]

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் சமூகம் என்ற சொல்லையும் பார்க்க.


குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 39. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமூகம்&oldid=35544" இலிருந்து மீள்விக்கப்பட்டது