சமயமும் நம்பிக்கையும்

சமயமும் நம்பிக்கையும் என்ற தலைப்பு குறித்த மேற்கோள்கள்

  • கடவுளை நேசி அவர் உன்னுள் தங்கியிருப்பார். கடவுளுக்குப் பணிந்து நட, அவர் தமது ஆழ்ந்த போதனைகளை உனக்குப் புலப்படுத்துவார். - ராபர்ட்ஸன்[1]
  • கடவுளும் சமயமும் இல்லாவிட்டால், மனிதரின் வாழ்க்கை பயனற்றதாகும் வாழ்க்கையில் எவ்வித உயர்ந்த நோக்கமும் இல்லாமற்போகும். -டில்லோட்ஸன்[1]
  • உண்மையான சமயம் நம்முடைய நடத்தையில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்புற்றிருக்கும்; ஒரு பச்சை மரத்தில் ஜீவாதாரமான சிறு வெகு தொலைவிலுள்ள கிளைகளுக்கும் செல்வது போல் அதுவும் பரவி நிற்கும்.[1]
  • சமயத்தினால் வரும் இன்பம் மனத்திற்கு ஒரு மந்திரவாதியை போன்றது. அது சதை சம்பந்தமான களிப்பு, பயித்தியம் ஆகிய அசுரர்களை ஓட்டிவிடும். -ஸெஸில்[1]
  • மனிதர்கள் மதத்திற்காகப் பூசலிடுவார்கள். அதைப்பற்றி எழுதுவார்கள். அதற்காகப் போராடுவார்கள். அதற்காக உயிரை விடுவார்கள். அதற்காக வாழ்வதைத் தவிர வேறு எதுவும் செய்வார்கள். - கோல்டன்[1]
  • இதயத்தில் சமயப்பற்று இல்லாமல் மூளையை மட்டும் விருத்தி செய்துகொள்வது நாகரிகமான அநாகரிகம்; மூடி மறைப்பது மிருகத்தனம். - பன்ஸன்[1]
  • சித்தாந்தங்கள் வழியெங்கும் அடர்த்தியாக வளர்ந்து கடவுளை மறைத்துவிடுகின்றன. -எல். டபுள்யுரீஸ்[1]
  • நான் சமயத்தைப் பெற்றிருக்க விரும்பவில்லை. அதுதான் என்னை ஆட்கொள்ள வேண்டும். - சார்லஸ் கிங்ஸ்லே[1]
  • ஒருவனுடைய ஒழுக்கம் போன பின்பு, அவனுடைய சமயம் தங்கியிராது. - ஸவுத்[1]
  • சமயச் சண்டை சைத்தானுக்கு அறுவடை. -ஃபாண்டெயின்[1]
  • முக்கியமான விஷயங்களில் சமயத்தை இரண்டாவதாகக் கருதுவது அதைப் பொருட்படுத்துவதாகாது. எவன் கடவுளுக்கு இரண்டாவது இடத்தை அளிக்கிறானோ அவன் இடமே அளிக்காதவனாவான். -ரஸ்கின்[1]
  • சமயம் தினசரி வாழ்க்கைக்கு உரியது. தொழில் நடத்தும் இடத்திற்கும் ஆலயத்திற்கும் ஒன்று போல உரியதாகும். - பீச்செர்[1]
  • நீ எந்த நிலையில் இருக்கிறாயோ அதைப் பொறுத்ததுதான் உனது நம்பிக்கையும். -என். போர்ட்டர்[1]
  • பயனுள்ள முயற்சிகளின் இரகசியம் நம்பிக்கையில் இருக்கின்றது. - புல்வர்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175-177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமயமும்_நம்பிக்கையும்&oldid=21245" இலிருந்து மீள்விக்கப்பட்டது