சார்லஸ் கிங்ஸ்லே

சார்லஸ் கிங்ஸ்லே (12 ஜூன் 1819 - 23 ஜனவரி 1875) என்பவர் இங்கிலாந்து திருச்சபை தேவாலய பாதிரியார், பல்கலைக்கழக பேராசிரியர், சமூக சீர்திருத்தவாதி, வரலாற்றாசிரியர் மற்றும் நாவலாசிரியர் ஆவார்.

Charles Kingsley - project Gutenberg eText 13103.jpg

மேற்கோள்கள்தொகு

  • எத்தனை பெரிய குடும்பச் சண்டைகள். விவாகச் சண்டைகள், உயில்களை மாற்றி எழுதுதல் முதலியவைகளைச் சீரண மாத்திரை கொடுத்தால் நிறுத்தியிருக்கலாம் வயிற்று மந்தத்தை நீக்கி, வெறியூட்டும் மது வகைகளையும் சமூகத்திலிருந்து ஒழித்துவிட்டால், குற்றங்கள் இல்லாமற்போகும் அல்லது மிகவும் குறைந்து போகும்.[1]
  • நான் சமயத்தைப் பெற்றிருக்க விரும்பவில்லை. அதுதான் என்னை ஆட்கொள்ள வேண்டும்.[2]
  • உயிருள்ள ஒரு மனிதனைத் தவிர, புத்தகத்தைப்போல ஆச்சரியமானது வேறு எதுவுமில்லை! அது முன்னால் இறந்து போனவர்கள் நமக்களித்துள்ள செய்தி. அந்த ஆன்மாக்களை நாம் பார்த்ததேயில்லை ஒரு வேளை, அவர்கள் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும் எனினும், அந்தச் சிறு காகிதங்கள் நம்மிடம் பேசுகின்றன. பயமுறுத்துகின்றன. நமக்குக் கற்பிக்கின்றன. ஆறுதலளிக்கின்றன. சகோதரர்களைப் போல நமக்குத் தம் இதயங்களைத் திறந்து காட்டுகின்றன.[3]

குறிப்புகள்தொகு

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 10. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175-177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 274-276. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சார்லஸ்_கிங்ஸ்லே&oldid=34920" இருந்து மீள்விக்கப்பட்டது