சகோதரத்துவம்
சகோதரத்துவம் (Brotherhood) என்பது அனைத்து மக்களிடையேயான பிணைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு சொல். சில சமயங்களில் ஒரு இன அல்லது சமூக அந்தஸ்துள்ள நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கிடையில், குறிப்பிட்ட மதத்தவர்களை உள்ளடக்கி கட்டுப்படுத்தப்படுத்த பயன்படுத்தும் சொல் ஆகும்.[1]
- வாழ்க்கை என்பது ஒருவன் தனக்காக வாழ்வதாகாது. நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும். - மினாண்டர்[1]
- இறைவனைத் தந்தையென்று கொள்ளாமல், மானிட சகோதரத்துவம் கிடையாது. - எச். எம். ஃபீல்ட்[1]
- நம்முடனுள்ள ஒருவன் எவ்வளவு கேவலமான தாழ்ந்தவனாயினும், அவனும் நம் மனித இனத்தைச் சேர்ந்தவனே. - ஸெனீகா[1]
- நன்மைகளுக்கெல்லாம் சிகரம், வாழ்க்கையின் இறுதி நட்சத்திரம், சகோதரத்துவம். - எட்வின் மார்க்காம்[1]