உபதேசம்
உபதேசம் (Preaching) என்பது பெரும்பாலும் மதகுருவின் சொற்பொழிவைக் குறிக்கிறது. இது வழக்கமாக கடந்த கால மற்றும் தற்போதைய சூழல்களில் உள்ள நம்பிக்கை, நடத்தை ஆகியவற்றை விளக்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- உன் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஆன்மிக வளர்ச்சியில் ஆசை கொண்டு விளங்கும்படி செய்ய வேண்டும் இல்லாவிடில் உன் உபதேசம் வீணானது. - கோல்பர்ன்[1]
- உபதேசியாரின் அறிவுத்திறனைக்காட்டிலும் அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையே கேட்பவர்களின் இதயங்களில் பதிகின்றது. உயிர்தான் உயிரை அளிக்க வல்லது. -ராபர்ட்ஸன்[1]
- உபதேசம் செய்பவர் படிப்பில்லாதவர்களுக்கு எளிய முறையிலும், தெளிவாகவும். பூரணமாகவும் கற்பிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், ஊக்கப் படுத்துவதைவிட அடிப்படையான விஷயங்களைக் கற்பிப்பது அவசியம. - லூதர்[1]
- உபதேசம் செய்வதற்கு உயிர்த்துடிப்புள்ள ஒரு மனிதன் போதும், பேரறிவு தேவையில்லை. -ஏ. ஃபெல்ஸ்[1]
- உலகின் தேவை நல்ல முறையில் உபதேசம் செய்வதன்று: ஆனால், நல்ல முறையில் கேட்பதுதான். - போர்ட்மன்[1]
- உபதேசம் செய்வது எளிது. ஆனால், நன்றாக உபதேசிப்பது மிகவும் கஷ்டம். - எம்ன்மஸ்[2]
- அவர் செருக்குள்ளவர்களை அடங்கச் செய்தார். பாவங்களுக்காக வருந்துபவர்களை உற்சாகப்படுத்தினார்: குற்றம் செய்யும் செல்வர்களை அஞ்சாது கண்டித்தார். அவர் நிறைய உபதேசம் செய்தார். ஆனால். உபதேசத்தைவிட அவர் வாழ்க்கையே அவர் போதித்த உண்மைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிற்று. - டிரைடன்[2]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 124. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.