உணர்ச்சி
(உணர்ச்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உணர்ச்சி (Emotions) என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம் அல்லது அதிருப்தி ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும்
மேற்கோள்கள்
தொகு- இதயம் மூளைக்கு மூத்தது. முதலில் தோன்றியதற்கு உணர்ச்சிகள் அதிகம்; ஆனால், அதற்குக் கண் தெரியாது. அதன் தம்பியாகிய மூளைக்குப் பார்வை அதிகம் உணர்ச்சி கிடையாது. குருடன் கண்ணுள்ளவனால் வழிகாட்டப்பெற வேண்டும். இல்லாவிடின் தடுக்கி விழுவான். -ஸீக்லொ[1]
- மலர்களுக்காக விரைவில் ஆவல் கொள்ளும் இதயந்தான் முள்ளைக் கண்டு முதலில் வருந்தும். - மூர்[1]
- உணர்ச்சி மிகுதியால் துயரம் ஏற்படுகின்றது. உணர்ச்சிக் குறைவால் குற்றத்திற்கு வழி பிறக்கும். - டாலிரான்ட்[1]
- சிரிப்பும் கண்ணீரும் உணர்ச்சி என்னும் ஒரே இயந்திரத்தை ஓட்டுகின்றன. ஒன்று. காற்றின் வலிமையாலும், மற்றது தண்ணீரின் வலிமையாலும் ஓட்டுகின்றன. அவ்வளவுதான். - ஹோம்ஸ்[1]
- உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் அவர்களுக்கு எல்லாம் தலைகீழாகவே தெரியும். - பிளேட்டோ[1]
- மனிதர்கள் உணர்ச்சிகளைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்வதைவிட்டு, தங்களை உணர்ச்சிகள் பயன்படுத்திக் கொள்ளும்படி வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். - ஸ்டீல்[1]
- உணர்ச்சிகள் நம்மை உணரச்செய்கின்றன. ஆனால், தெளிவாகப் பார்க்கும்படி செய்வதில்லை. - மான்டெஸ்கியு[1]
- அடிமைகளுள் மட்டமானவன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவன். - புருக்[1]
- சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன. முடிவு செய்கின்றன. நாம் அருகில் நின்று வியந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. - ஜார்ஜ் எலியட்[1]
- உணர்ச்சிகள் அடங்காத கால்நடைகள். ஆதலால், அவைகளைக் கட்டியே வைக்க வேண்டும். நமது சமயம், அறிவு. முன் கவனம் ஆகியவைகளால் நாம் அவைகளை ஆண்டு அடக்கி வரவுேண்டும்.[1]
- உணர்ச்சி என்பது உள்ளத்தின் குடிவெறி, - ஸௌத்[1]
- உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒவ்வொரு மனித இதயமும் ஒரு தனி உலகம் அதன் அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்படாது. - புல்வெர்[1]
- அநேகமாக எல்லா மனிதர்களும் ஒவ்வோர் உணர்ச்சியையும் ஓரளவு பிறப்பிலேயே பெற்றுள்ளனர். ஆனால், ஒவ்வொருவருடைய உணர்ச்சிகளிலும் ஓர் உணர்ச்சி மட்டும் முனைப்பாக நிற்கும். இதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த முதன்மையான உணர்ச்சி சம்பந்தப்பட்ட மட்டில், ஒருவனை நாம் நம்பியிருக்கக்கூடாது.- செஸ்டர்ஃபீய்ட்[1]