உடை

ஆள் பாதி ஆடைப் பாதி என்பர்.

மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை (clothing, clothes, attire) எனலாம். உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய இரண்டும் உணவு, உறையுள் என்பன.

பழமொழிகள்தொகு

  • ஆள் பாதி ஆடை பாதி

திரு. வி. கலியாணசுந்தரனார் தொகு

  • உடையிலும் மனிதன் எளிய உடை அணியவே பயிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயற்கை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை.[1]
  • எளிய உணவும் எளிய உடையும் மனித வாழ்வை பண்படுத்தும் இயல்பின.[1]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=உடை&oldid=17334" இருந்து மீள்விக்கப்பட்டது