இழிதொழில் குறித்த மேற்கோள்கள்

  • இழிவான தொழில் ஒவ்வொன்றும் ஒருவனை அதிலே கூர்மையுள்ளவனாகச் செய்யும். ஆனால், மற்றவைகளிலெல்லாம் அவனுடைய அறிவை மழுக்கிவிடும். - ஸர் பி. ஸிட்னி[1]
  • கடலில் ஒருவன் ஓரளவு ஆழத்திற்குக் கீழே செல்லாதபடி இயற்கையின் விதி தடுத்துவிடுகின்றது. ஆனால், இழிவாகிய கடலில் நாம் ஆழ்ந்து செல்லச் செல்ல, மேலும் மூழ்குவது எளிதாயிருக்கும். - ஜே. ஆர். லோவெல்[1]
  • முகஸ்துதி என்பது பரஸ்பரம் நடக்கும் ஒரு இழிதொழில். ஒருவரையொருவர் ஏமாற்ற விரும்பினாலும் ஒருவரும் ஏமாந்து போவதில்லை. -கோல்ட்டன்[2]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 109. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இழிதொழில்&oldid=20127" இலிருந்து மீள்விக்கப்பட்டது