ஆல்பர்ட் சுவைட்சர்
பிரெஞ்சு-ஜெர்மன் மருத்துவர், இறையியலாளர், இசைக்கலைஞர், மெய்யியலாளர் (1875-1965)
ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer, 14 சனவரி 1875–4 செப்டம்பர் 1965 ) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர். ஆல்பர்ட் சுவைட்சர் மெய்யறிவாளராகவும் மருத்துவராகவும் மதபோதகராகவும் தொண்டூழியம் செய்த மனித நேயராகவும் விளங்கினார். தம் வாழ்வின் இறுதி வரை அணுக்குண்டு தயாரிப்பு, சோதனைகள் அணு ஆயுதங்கள் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
நபர் குறித்த மேற்கோள்
தொகு- ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளில் பைபிளின் நீதிகளைக் கண்டார். அந்நூலை மிகப் போற்றினார். அவருக்கு கீதையைப் பிடிக்காது. ஏனென்றால் அது அறநெறியை வலியுறுத்தவில்லை. குறளோ அன்பு, கடமை என இரண்டையும் வலியுறுத்துகிறது. -ஜார்ஜ் எல். ஹார்ட்[1]