ஹென்றி கிளே
அமெரிக்க அரசியல்வாதி சொற்பொழிவாளர்
ஹென்றி கிளே (12 ஏப்ரல் 1777 - 29 சூன் 1852) என்பவர் ஒரு முதன்மை அமெரிக்க அரசியல்வாதி மற்றும் சொற்பொழிவாளர் ஆவார். இவர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் பணியாற்றினார். மற்றவர்களை உடன்படிக்கைக்கு கொண்டுவரும் திறனுக்காக "தி கிரேட் காம்பிரமைசர்" மற்றும் "தி கிரேட் பேஸிஃபையர்" என்று அழைக்கப்பட்ட இவர் விக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தியவர்.
மேற்கோள்கள்
தொகு- உண்மையான பேச்சுத் திறனுக்கு ஈடான ஆற்றலில்லை. ஸீஸர் மக்களின் அச்சங்களைக் கிளறிவிட்டு அவர்களை அடக்கி ஆண்டு வந்தார். ஸிஸரோ அவர்களுடைய அன்பைக் கவர்ச்சி செய்து உணர்ச்சிகளை ஆண்டு வந்தார். ஸீஸரின் செல்வாக்கு அவர் ஆயுளுடன் முடிந்தது. மற்றவருடைய செல்வாக்கு இன்றுவரை தொடர்ந்து நிற்கின்றது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 199-200. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.