ஹாஜி மசுதான்
இந்திய மாபியாக்கள்
மசுதான் ஹைதர் மிர்சா அல்லது ஹாஜி மசுதான் (1926-1994) இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனைக்குளத்தில் பிறந்தவர் ஆவார். மும்பையில் மாஃபியா கும்பலுடன் தொடர்புடைய இவர் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
இவரது கருத்துகள்
தொகு- என்னவோ இந்த நாட்டின் 55 கோடி ஜனங்களில் ஹாஜிமஸ்தான்தான் மாபெரும் பாவிபோல இந்த நாட்டின் பத்திரிகைகளிலும், பாராளுமன்றத்திலும், மகாராஷ்டிர சட்டசபையிலும் என் பெயர் தினம் தினம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். ஒருவனுக்குப் பெருமையோ இழிவோ எதற்கும் இப்படியொரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த ஹாஜிமஸ்தானைத் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்குப் பெரும் கள்ளக்கடத்தல்காரர்கள் இங்கே உண்டு என்று வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன்.- (1975)[1]
- என்னைக் கவி அரங்க நிகழ்ச்சிகளுக்கோ, இலக்கியக் கூட்டங்களுக்கோ இசை நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திரையுலக விழாக்களுக்கோ தலைமை வகிக்கவோ, துவக்கி வைக்கவோ அழைக்கும்போது எனக்குள்ளாகவே சிரித்துக் கொள்வேன். பணத்துக்குத் துதி பாடும் மக்களின் அறியாமையையும் முகஸ்துதியையும் எண்ணிப் பார்ப்பேன். உருதுக் கவிதைகளும், இசையும் எனக்கு உயிர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இதைப் போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கிறார்கள். — (1975)[2]
குறிப்புகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.