சாமுவேல் ஜோன்சன்
(ஸாமுவேல் ஜொன்ஸன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாமுவேல் ஜோன்சன் (1709-1784) ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். ஆங்கிலேயரான இவர் ஒரு விமர்சகரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ஒரு கொசுவானது ஒரு குதிரையைக் கடித்து அதனைச் சிறிது முனகச் செய்யலாம், இருந்தாலும் ஒன்று வெறும் பூச்சிதான், மற்றது எப்போதும் குதிரைதான்.
- "நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே!,
நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!!." - மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் அதிகாரம் அளப்பரியது என்பதனாலோ என்வோ நம் சட்டங்கள் பெண்களுக்குக் குறைவான அதிகாரத்தையே தருகின்றன..[1]
- மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.[2]
- செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்று தான் காப்பாற்ற இயலும்.[3]
- அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும்.[4]
- சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.[5]
- செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.[5]
- உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.[6]
- உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.[7]
- மனிதன் எவ்வளவு உயர்ந்த அறிவைப் பெற்றிருந்த போதிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும் அவனுக்குப் பிறர் உதவியில்லாமல் முடியாது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 6
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 5.0 5.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம். நூல் 178-179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
வெளி இணைப்புக்கள்
தொகு
- Samuel Johnson: Biography, Works, Articles and Quotes at Luminarium
- Samuel Johnson at Project Gutenberg
- Brief biography at The Samuel Johnson Sound Bite Page
- Samuel Johnson Page at Rutgers University
- Online Books Page (University of Pennsylvania)
- Boswell's Life of Johnson at Project Gutenberg
- Anecdotes of the late Samuel Johnson by Hester Thrale