ஷெர்லாக் ஹோம்ஸ்
ஷெர்லக் ஹோம்ஸ் (Sherlock Holmes) இசுக்காட்லாந்திய மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆர்தர் கொனன் டாயிலால் உருவாக்கப்பட்ட ஒரு துப்பறிவாளர் கதாபாத்திரம். இலண்டன் நகரில் வாழ்ந்த ஹோம்ஸ் ஒரு தனியார் துப்பறிவாளர். தனது கூர்மையான தருக்க காரணமாய்தல், வேடமணியும் திறமை, தடயவியல் திறன் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான குற்றங்களைப் புலனாய்வதில் வல்லவர்.
மேற்கோள்கள்
தொகு- நடக்க முடியாதவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சியிருப்பது எவ்வளவு நம்பமுடியாததாக இருந்தாலும், அதுவே உண்மையில் நடந்திருக்க வேண்டும்.[1]
- ஒரு துளி தண்ணீரிலிருந்து ஒரு தருக்கவியலாளர், அது அட்லாண்டிக்கிலிருந்து வந்ததா நயாகராவிலிருந்து வந்ததா என்று துப்பறிய முடியும். இதற்கு அவர் அவ்விடங்களுக்கு போயிருக்க வேண்டுமென்று அவசியமே இல்லை.
- கடந்த மூன்று நாட்களில் எதுவுமே நடக்கவில்லை, அதுதான் இம்மூன்று நாட்களில் நடந்த ஒரே ஒரு முக்கிய நிகழ்வு.[2]
- இவ்வுலகில் எல்லாம் ஒன்றோடொன்று சார்புடையது.[3]
சான்றுகள்
தொகு