வேர்ஜில்
வேர்ஜில் எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ (Publius Vergilius Maro, அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், புகோலிக்ஸ் (Bucolics), ஜோர்ஜிக்ஸ் (Georgics), ஏனீட் (Aeneid) என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ஏனீட் என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.