வேயின் டையர்

வேயின் டையர் (Wayne Walter Dyer, மே 10, 1940 - ஆகத்து 29, 2015) ஓர் அமெரிக்க மெய்யியலாளர், சுயமேம்பாடு நூல்களின் ஆசிரியர், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். “நீங்கள் தவறிழைக்கும் பகுதி” (your erroneous zone) என்னும் இவருடைய முதல் நூல் 35 மில்லியன் படிகள் விற்று விற்பனையில் எப்பொழுதுமில்லாத சாதனை புரிந்துள்ளது.

இவரின் கருத்துக்கள்[1]

தொகு
  • உங்களுடைய பங்கேற்பு இல்லாமல் முரண்பாடுகளால் தொடர்ந்து செயல்பட முடியாது.
  • ஒன்றைப்பற்றி எதுவுமே தெரியாமல் அதை நிராகரிப்பதே அறியாமையின் உயர்ந்த வடிவம்.
  • நீங்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்யும்போது, நீங்கள் அவர்களை வரையரை செய்யவில்லை நீங்கள் உங்களை வரையறுக்கிறீர்கள்.
  • இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் உள்ளது.
  • நாம் என்ன நினைக்கிறோம் என்பதே, நமக்கு என்ன நடக்கும் என்பதை தீர்மாணிக்கிறது.
  • வெற்றிகரமான மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் பணம் சம்பாதிக்கும் மக்கள் வெற்றிகரமானவர்களாக ஆவதில்லை.
  • தூய நிபந்தனையற்ற அன்பைவிட சொர்கத்திலோ அல்லது பூமியிலோ அதிக சக்தி ஒன்றுமில்லை.
  • எதிர்காலம் யாருக்கும் உறுதியளிக்கப்பட்டதல்ல; இப்பொழுதே செயல்படத் தொடங்கு.
  • நம்மால் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் மொத்த தொகையே நம் வாழ்க்கை.
  • எதிரானவை எல்லாம் உங்களை பலவீனப்படுத்துகிறது; சாதகமானவை எல்லாம் உங்களை பலப்படுத்துகிறது.
  • நீங்கள் அணியும் இறுதி ஆடையில், உங்களுக்கு பை எதுவும் தேவைப்படாது.
  • உங்கள் கற்பனை உங்களுடையது மற்றும் உங்களுடையது மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • அற்புதங்கள் கணப்பொழுதில் வரக்கூடியவை அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. தி இந்து, வணிகவீதி இணைப்பு 31.10.2016
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேயின்_டையர்&oldid=14710" இலிருந்து மீள்விக்கப்பட்டது