மேற்கோள்கள்

தொகு
  • கருத்தும் கடவுளும்

கடவுளை வணங்கும் போது, கருத்தினை உற்றுப் பார் நீ !
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் ஆங்கே
மனிதனிடம் எதையும் எதிர் பார்க்காதீர்கள்
அப்படி எதிபார்த்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும்
உங்களின் எதிர்பாப்பு கடவுளிடம் இருக்கட்டும்

  • மனிதன் எவ்வளவு வளர்ந்தாலும், எவ்வளவுதான் கற்றாலும், எவ்வளவுதான் தீவிரமாக முயன்றாலும்,

அவர்களுடைய பழக்க வழக்கம் அவர்களை கீழ் நோக்கி இழுத்துவிடும்
அதனால் நாமெல்லாம் பழக்கத்தில் இருந்து விளக்கத்திற்கு நம்மை மாற்றி அமைக்க வேண்டும்
அப்பொழுது தான் எதையும் புரிதல் உணர்வோடு வாழமுடியும்.

  • எத்தனை கோடி இன்பம் படைத்தாய் இறைவா என்றால் "துவைதம்" (இரண்டு என்று அர்த்தம்)

எத்தனை கோடி இன்பமானாய் இறைவா "அத்வைதம்" (ஒன்றாக மாறிக்கொன்டிருத்தல்)

  • அறிவின் வளர்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெற முடியும்.

அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி, அதை ஏற்றுக்கொள்வோம்.
அறிவு கெட்டு உயிர் நீடித்துப் பயன் இல்லை
என்பது அறிஞர் கண்ட தெளிவு

  • உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும் உயிரின் களங்கமாக விளங்கும் வாழ்க்கை சிக்கல்களும் கவலையாக மாறுகிறது
  • வினா: ஐயா, தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி விடை: குருவின் கால்களைத் தொட்டு வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும். நாம் தூய்மை பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. அதனால் மக்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களை இறைநிலை வரை உயர்த்தி விட்டிருக்கிறேனே. இன்னும் ஏன் குனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் ? குருவின் ஆசியைப் பெற அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது.

  • உள்ளத்தின் சோதனை.

மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அதுபோன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதிபெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும். ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் உன்றவோ வளரவிடவோ கூடாது.கோபம், வஞ்சம், பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகாரபோதை என்ற பத்து வரையும் நமது உள்ளத்தில் நிலைபெற வொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக்கொண்டே இருக்கும் ஓட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாறிவிடும். காலையிலும் மாலையிலும் 10 நிமிடநேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.

  • கன்மம்

சீவகாந்தம் உயிரினத்தில் சீர்குலைந்த்தால் தடைப்பட்டால் மின்குறுக்காம் சிக்கலே வலி துன்பம் சாவு இவை விரும்பிச் செய்தால் பழிச்செயல் ஆம்

  • நான் திருந்தி என்ன பயன்? அவர் திருந்த வேண்டாமா? என்று நினைக்காமல் முதலில் நம்மை திருத்திக் கொள்வோம்.

அடுத்தவர் தாமே திருந்தி விடுவார்

  • அனுபோகப் பொருட்கள் மிகமிக உடல் நலம் கெடும்

சொத்துக்களின் எண்ணிக்கை மிகமிக மன அமைதி கெடும்

"https://ta.wikiquote.org/w/index.php?title=வேதாதிரி&oldid=6370" இலிருந்து மீள்விக்கப்பட்டது