வேதநாயகம் பிள்ளை

எழுத்தாளர், புலவர், நீதிபதி

வேதநாயகம் பிள்ளை (11 அக்டோபர் 1826 - 21 சூலை 1889) என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879), புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் புத்தகங்களைப் படிப்பதால் உலக நடையையும், நல்ல குணங்களையும், நல்ல பழக்கத்தையும் யாவரும் அடையலாமென்று நான் சொல்வது மிகையாகாது. — உ. வே. சாமிநாதையர்
  • அவர்தம் உயரிய குணங்களை அவர் செய்த நூல்கள் இன்றும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. சில நூலாசிரியர்களின் நூல்கள் அவ்வக் காலத்தில் மட்டுமே பயன்படுபவை. அறிஞர் வேதநாயகம் பிள்ளையின் நூல்கள். என்றும் உயிர் உள்ளவையாக நின்று பயன்படுபவை. கி. ஆ. பெ. விசுவநாதம்
  • வேதநாயகர் தமிழ் உலகம் கண்ட மகான். தமிழுலகில் உற்ற குறை திருத்த முற்பட்ட உத்தமன். கண்ணியமும் யோக்கியமுமான குடும்பத்திலே பிறந்தார். நல்ல சூழ்நிலையில், கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டார். நல்ல மாணாக்கராக, கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார். காலத்தை உபயோகமான முறையில் போக்கினார். தாம் நல்லவராக நடந்து பிறரையும் நல்லவராக்க வேண்டுமென எண்ணினார். —K. S. ராமசாமி சாஸ்திரி, B,A., B.L, சென்னை.

கருவி நூல்

தொகு
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேதநாயகம்_பிள்ளை&oldid=38184" இலிருந்து மீள்விக்கப்பட்டது