வில்லியம் ஹாஸ்லிட்

ஆங்கில எழுத்தாளர்

வில்லியம் ஹாஸ்லிட் (10 ஏப்ரல் 1778 – 18 செப்டம்பர் 1830) என்பவர் ஒரு நாடக விமர்சகர், மெய்யியல் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, ஒவியர் என்னும் பன்முகம் கொண்டவர். இவர் ஆங்கில மொழியில் கட்டுரை மற்றும் விமர்சன எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.

இவரின் பொன்மொழிகள்[1] தொகு

  • ஒரு மென்மையான சொல், ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்த முடியும்.
  • இதயம் மற்றும் புரிதலின் மூலம் இயற்கையினைப் பார்க்க வேண்டுமே தவிர வெறும் கண்களால் அல்ல.
  • அழுவதற்கும் சிரிப்பதற்கும் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே.
  • மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பலரும் பார்த்தார்கள்; ஆனால் ஏன் என்று கேட்டவர் நியூட்டன் ஒருவரே.
  • விதிகள் மற்றும் மாதிரிகள் ஆகியவை அறிவாற்றல் மற்றும் கலை ஆகியவற்றை அழித்துவிடுகின்றன.
  • செழிப்பு ஒரு சிறந்த ஆசான்; வறுமை அதைவிட சிறந்த ஆசான்.
  • வாக்குறுதிகளை மீறுவதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே சிலர் அதனை மீறிவிடுகிறார்கள்.
  • எந்த அளவு நம்பிக்கை உள்ளதோ அந்த அளவிற்குத் திறமை உண்டு.
  • அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது.
  • நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.
  • அடுத்தவரை மகிழ்விக்கும் கலையானது, நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • தான் இறந்து விடுவோம் என்பதைப்பற்றி எந்த இளைஞனும் ஒருபோதும் நினைப்பதில்லை.

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள் தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=வில்லியம்_ஹாஸ்லிட்&oldid=14450" இலிருந்து மீள்விக்கப்பட்டது