விடாமுயற்சி
விடாமுயற்சி என்பது தளராமல் முயற்சி செய்வதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
- அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல. - சமுவெல் ஜோன்சன்
- பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும். - வில்லியம் பெதர்
- நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது. - ப்ரெமர்
- உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல. - சேர் வின்சுடன் சேர்சில்
- நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. - ஆபிரகாம் லிங்கன்
பழமொழிகள்
தொகு- அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- அழுத பிள்ளை பால் குடிக்கும்.