ரெய்னர் மேரியா ரில்க்
ஆஸ்திரிய கவிஞர், எழுத்தாளர்
ரெனே கார்ல் வில்லெம் யோகண் யோசஃப் மரியா ரில்கே (René Karl Wilhelm Johann Josef Maria Rilke, 4 திசம்பர் 1875 – 29 திசம்பர் 1926) ஓர் பொகீமிய–ஆஸ்திரிய கவிஞர். இவர் ரெய்னர் மரியா ரில்கே என்று நன்கு அறியப்பட்டவர் . இடாய்ச்சு மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக விளங்குகிறார். மரபுவழிக்கும் நவீனத்துவத்திற்கும் இடைப்பட்டவராக கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ஒரு பெண்ணின் தோள்மீது கைவைத்த அளவிலேயே, என்னுடைய காதலின் முழுமையான உணர்ச்சியைத்தெளிவாக அவளுக்கு உணர்த்த முடியும்.[1]
- நான் கலையை வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை; எப்படியும் அவையிரண்டிற்கும் பொருள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.[1]
- யார் வெற்றியைப்பற்றிப்பேசுகிறார்கள்? எதையும் தாங்கும் இதயமே வாழ்க்கை[1]
நபர் குறித்த மேற்கோள்கள்
தொகு- ரில்க்கின் கவிதைகள் சீரழிந்து போன நடுத்தர வர்க்கத்தின் பிதற்றல்கள்! எனக்கு அவற்றைப் பற்றிக் கவலையில்லை -பெர்டோல்ட ப்ரெக்ட்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 கவிஞர் முருகு சுந்தரம் (1993). புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள். நூல் 42-54. அன்னம் (பி)லிட். Retrieved on 11 சூன் 2020.