ராக்பெல்லர்

ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller, ஜூலை 8, 1839 – மே 23, 1937, John D. Rockefeller) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  • வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லுங்கள்.
  • உண்மையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
  • மனதை தளரவிடாதீர்கள்
  • உண்மையைக் கடைபிடியுங்கள்.
  • நீங்கள் இல்லாவிட்டால் முதலாளிக்கு பெருத்த நஷ்டம் என்று அவர் எண்ணும்படியாகச் சாமார்த்தியமாக வேலை செய்யுங்கள்.
  • சிறு உத்தியோகத்தில் சேர்ந்து பெரிய பதவிக்கு வர வேண்டும்.
  • பிறர் உங்களிடம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகச் செய்யுங்கள்.
  • செய்யும் தொழிலைப்பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள வேண்டும்.
  • கஷ்டப்பட்டு வேலை செய்யாவிட்டால் வாழ்க்கையில் சந்தோஷத்தையே காண முடியாது.
  • விளையாட்டுகளில் மனதை ஓடவிடக்கூடாது.[1]
  • முதலாளிகளால் தொழிலாளி நசுக்கப்படாமலிருக்கவும் தொழிலாளரால் மூலதனம் போட்டவர்களுக்கு இடையூறில்லாமலிருக்கவும். தொழிலாளரே தொழிலாளரை அடக்காமலும். முதலாளிகளே முதலாளிகளை நசுக்காமலும் இருக்கும் நிலையை உண்டாக்க வேண்டுமென்ற முறையில், நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.[2]

குறிப்புகள்

தொகு
  1. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள். பக்கம்-8, ஆசிரியர் முல்லை முத்தையா
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 318-319. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராக்பெல்லர்&oldid=36278" இலிருந்து மீள்விக்கப்பட்டது