• நம்முடைய நேரம் நமக்கு மதிப்பற்ற செல்வம். அதேபோல மற்றவர்களுடைய நேரம் அவர்களுக்கு மதிப்பற்ற செல்வம். எனவே நம்முடைய நேரத்தை நாம் மதிப்பதைப் போலவே மற்றவர்களுடைய நேரத்தையும் நாம் மதிக்கவேண்டும்.
  • விலை மதிப்பற்றது காலம். அதனை இழந்தால் திரும்பப் பெற முடியாது. எனவே உரிய காலத்தில் உரிய செயல்களைச் செய்தல் வேண்டும்.
  • ஒருவர், தன்னுடைய நேரத்தை எச்செயல்களில் வீணாகச் செலவிடுகிறோம் என்பதனை அறிய வேண்டும். பின்னர் அச்செயல்களை கைவிட்டு அதற்காகச் செலவிட்ட நேரத்தை எந்தெந்த பயனுடைய செயல்களில் செலவிட வேண்டும் என முடிவெடுத்துச் செலவிட வேண்டும்.
  • காலத்தின் அருமையை அறியாமல் அதனை நாம் சிறிது சிறிதாகச் செலவிடுகிறோம். அதனைத் தொகுத்துப் பார்த்தால் பேரளவு நேரத்தை நாம் வீணாக்குகிறோம்.
  • படித்தல் போன்ற முக்கியமான பணிகளுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு முக்கியத்துவம் அற்ற செயல்களுக்கு குறைந்த நேரத்தைச் செலவிட வேண்டும்.
  • இலையிற் படிந்திருக்கும் தூசியை அந்த இலையைக் கிழித்தோ, உதிர்த்தோ விடாமல், மழைநீர் கழுவிட்டுப் போவதைப் போல நண்பர்களின் தவறுகளையும் குறைகளையும் அவர்களது மனம்நோகாமல் சுட்டிக்காட்டுவதோடு அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் கூற வேண்டும்.

கொட்டும் அருவி நீரைப் போன்ற

குளர்ச்சியான குழந்தையை

தட்டிக் கொடுத்து ஊக்கி நல்ல

தளிராய் வளர்த்துப் பேணுவோம்

முதியவர் ஒருவரின் வாழ்க்கை ஒரு வரலாறு. அந்த வரலாறைக் கூர்ந்து கேட்டால், அவர் சந்தித்த வெற்றி, தோல்வி; அவற்றில் இருந்து அவர் பெற்ற படிப்பினை ஆகியவற்றை நாம் எளிதாகப் பெறலாம்.

அடிப்பது இயலாமையின் வெளிப்பாடு. ஒருவர் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்லி நிறுவமுடியாத பொழுதுதான் தன்னுடைய தவறு வெளிப்படும்பொழுதுதான் மற்றவரை கைநீட்டி அடிக்கிறார்.

"https://ta.wikiquote.org/w/index.php?title=யரலவழள&oldid=6807" இலிருந்து மீள்விக்கப்பட்டது