மேற்கோள் தொகுப்பு

பல்வேறு இயல்கள் குறித்த பலரின் மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படும். ஒரே இயல் குறித்து நான்குக்கு மேற்பட்ட மேற்கோள்கள் இருந்தாலோ ஒரே நபர் கூறிய நான்குக்கு மேற்பட்ட இயல்கள் இருந்தாலோ அவற்றுக்குத் தனிப்பக்கம் தொடங்கலாம்.

மழலை

தொகு
  • மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே - குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்

புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே

  • வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து - இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.

வாழ்க்கைப் புதிர்

தொகு
  • முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை - ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை அறிந்தவரும் இல்லை!

புரூசு லீ

தொகு

புரூசு லீயின் தத்துவங்களுள் சில:

  • சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும். பழமையிலிருந்து நீ பாதுகாப்பைப் பெறுகிறாய்; புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தும் பொருட்டு மஞ்சள் இலைகள் தங்கக் காசுகள் ஆகலாம்; அது போல, ஒளிமறை இயக்கங்களும் முறுக்கிய தோற்றமைவுகளும் விசயமறியாத வீரக்கலை ஆர்வலர்களைத்தான் திருப்தி செய்யும்.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

ஜெயகாந்தன்

தொகு
  • மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்
"https://ta.wikiquote.org/w/index.php?title=மேற்கோள்_தொகுப்பு&oldid=12269" இலிருந்து மீள்விக்கப்பட்டது