மேரி கியூரி
போலந்து-பிரெஞ்சு இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் (1867-1934)
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்த இவர் பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
இவரது கருத்துக்கள்
தொகு- மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, பதக்கங்களால் என்ன பயன்? என்னுடைய நோபல் பதக்கங்களையும் போர் நிதிக்குக் கொடுத்துவிட்டேன்.[1]
நபர் குறித்த மேற்கோள்கள்
தொகு- நோபல் பரிசு பெற்ற மேடம் க்யூரி அம்மையாரிடம் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தை ஓர் அதிருஷ்டமாக நம்பினேன், அவரது மனோதிடம், ஆராய்ச்சியில் இருந்த தணியாத ஆர்வம், விடாமுயற்சி, எடுத்த செயலைத் தொடர்ந்து ஆற்றும் திறமைகளால்தான் அவரால் மிகச்சிறந்த விஞ்ஞானியாக விளங்க முடிந்தது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
- ↑ என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.