முதியோர் கல்வி

வயதுவந்தோருக்கான கல்வி

முதியோர் கல்வி அல்லது வயதுவந்தோர் கல்வி (Adult education) என்பது முதியவர்கள் அறிவு, திறமை, மனப்பான்மை மற்றும் விழுமங்களை பெரும் வகையில் முறைப்படுத்தப்பட்டு தன்னிறைவு பெரும் சுய கற்றலுக்கு பயிற்சி அளிப்பதாகும்.

வயதுவந்தோருக்கான திறந்தவெளி பள்ளி, கினியா-பிசாவு, 1974

மேற்கோள்கள்

தொகு
  • போதனா முறையென்பது சிறுவர்களுக்கு மட்டும் தானென்பது பழைய காலத்துச் சம்பிரதாயமாகும். பள்ளிக் கூடங்களில் வெகுவாய்ப் படித்தவர்களில் பெரும்பாலோர் நமது நாட்டில் தமது பிற்கால வாழ்வில் தமது கல்வியை அறவே மறந்துவிடுகிறார்களென்பது உண்மை. வயது வந்தவர்களுக்கும் கல்வியறிவூட்ட வேண்டியது கல்வி முறையின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாகப் பாவிக்கப்பட வேண்டும். நமது நாட்டில் கோடிக்காக்கான மக்கள் எழுத்து வாசனையறியாமல் இருப்பதற்குக் காரணம், வயது வந்தவர்களுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்ற கடமையை நாம் உணராததேயாகும். சில தொழிலாளர்களுக்கும், திண்டப்படாதார்களுக்கும் சிற்சில விடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெருவாரியான மக்களுக்கு சினிமா, பேசும் படக்காட்சி ஆகாசவாணி முதலிய நவீன சாதனங்களின் மூலம் கல்வி கற்பிக்க நாம் தீவிரமாக முன் வரவேண்டும்.
    • எஸ் இராமநாதன் எம்.ஏ.,பி.எல்., 1931-ல்ஈரோட்டில் நடைபெற்ற மகாஜன உயர்நிலைப் பள்ளி மாணவர் இலக்கியக் கூட்டத்தில்.[1]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=முதியோர்_கல்வி&oldid=37469" இலிருந்து மீள்விக்கப்பட்டது