முகம்மது நபி

இசுலாமிய சமயத்தின் நிறுவனர் மற்றும் முக்கிய நபிமார் (பொ.ஊ.. 570-632)

மேற்கோள்கள்

தொகு
  • நாம் யாருக்கும் மேலல்ல.யாரும் நமக்கு மேலோர் அல்ல.
  • தீமையை எங்கு கண்டாலும், உன் கரங்களால் தடு. இயலவில்லையா, உன் வாய்ச் சொல்லால் தடு. அதுவும் இயலவில்லையா, உன் மனத்தாலாவது அதை வெறுத்தி விலகிச் செல்.
  • உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன்.
  • நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும், பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.
  • தொழுகை முஸ்லீம்களின் முக்கியக் கடமை. தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.
  • உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார்.
  • மனிதர்களைப் பற்றித் தீய எண்ணங்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • கொடுக்கும் கையானது வாங்கும் கையைவிட மேலானது.
  • கண்டிப்பாக மதுவே அனைத்து கெட்ட காரியங்களுக்கும் தாய் ஆகும்.
  • தனது சமூகத்தார் இன்னொரு சமூகத்தின் மீது கொடுமை புரியும் போது, அதற்குத் துணை புரிவதுதான் இனவெறியாகும்.
  • மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
"https://ta.wikiquote.org/w/index.php?title=முகம்மது_நபி&oldid=37679" இலிருந்து மீள்விக்கப்பட்டது