மிசோ பழமொழிகள்
மிசோரத்தின் ஆட்சி மொழியான மிசோ மொழியில் உள்ள பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
பழமொழிகள்
தொகு- கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்காது, எளிதில் கிடைத்தவைக்கு மதிப்பு இருக்காது.
- பழத்தின் ஓடு நல்லாயிருந்தால் விதையும் நன்றாக இருக்கும்.
- சிறு கற்களின் உதவியின்றி பெரும்பாறையை நிலை நிறுத்த முடியாது.
- ஒருவனுக்கு எதிரி அவனே.
- மாடு தப்பித்த பின்னர், கதவை மூடுவது முட்டாள் தனம்.
- இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதே.