மா. இராசமாணிக்கம்

முனைவர், எழுத்தாளர்

மா. இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.

மா. இராசமாணிக்கம்


நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு

"இவரோ பிழைக்கப் பிறந்தவர் அல்லர்; உழைக்கப் பிறந்தவர். தமிழ்த் தொண்டாற்ற வாழ்ந்தவர். நேரமிருந்ததால் வாய்ப்பினைப் பயன்படுத்தினார்.

'பத்துப்பாட்டு' என்னும் பண்டை இலக்கியத்திற்கு உரை எழுதினார். பாடுபட்டு எழுதினார். பாடுபட்டு எழுதிய விரிவுரையை வெளியிட வேண்டி, அதைச் சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்தார். இந்த அப்பாவி மனிதர்.

பல்கலைக் கழகத்தின் நேரத்தில் சொந்த வேலையைக் கவனித் திருக்கலாம். எழுதிவிட்டதை, வெளியார் வழியாக, வெளியிட்டிருந்தால் ஏதோ நாலு பணம் கிடைத்திருக்கும்.

அதை அறியாது, பல்கலைக் கழகத்திடம் தம் உரையைக் கொடுத்து விட்டார். பல்கலைக் கழகம் காவல் கழகமாகச் செயலாற்றியது. டாக்டர் பட்டங்களுக்காக அனுப்பப்படும் ஆய்வுரைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, பாதுகாப்பாகப் பூட்டி வைத்துவிட்டு அவற்றை வெளியிட முன்வராது.

இராசமாணிக்கனார் எழுதியதை யாரும் காணாதபடி பூட்டி வைத்துவிட்டது. வெளிவராது என்பது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததோ இல்லையோ, எனக்குத் தெரியாது. பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் மாண்டார் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரிந்ததே.

தம்மை வளர்த்துக் கொள்ளப் பாடுபட்டதைப் போல் தமிழ்ச் சமுதாயத்தை வளர்க்கவும் பாடுபட்டார். எதிர் நீச்சலில், தம் முயற்சியால் தமிழ் இலக்கியக் கடலில் நீந்திக் கரைசேர்ந்த, காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழரை ரீடராகவே மாளவிட்டது நம் சமுதாயத்திற்குக் களங்கம்."[1]

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு. நினைவு அலைகள், பாகம் 1. சாந்தா பதிப்பகம். pp. 18. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மா._இராசமாணிக்கம்&oldid=36525" இலிருந்து மீள்விக்கப்பட்டது