மார்டின் லூதர் கிங்

காந்தியவாதி

மார்டின் லூதர் கிங் (சனவரி 15, 1929 – ஏப்ரல் 4, 1968) கருப்பினத்தவர்களின் சமூக நீதிப் போராட்டத்தை நடத்திய தலைவர்களுள் ஒருவர். 1964 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வாங்கியவர். அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.

எனக்கு ஒரு கனவிருக்கிறது

மேற்கோள்

தொகு
  • நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
  • எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
  • வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது.
  • நீக்ரோவின் வாழ்க்கை கவலை அளிக்கக் கூடிய விதத்தில் ஒதுக்கலின் விலங்காலும், பாரபட்சத்தின் சங்கிலியாலும் முடமாகிக்கிடக்கிறது.
  • தகிக்கும் கோடையாயிருக்கும் நீக்ரோவின் இந்த மனக்குறை விடுதலை, சமத்துவம் எனும் உயிரூட்டும் வசந்தங்கள் வந்தாலன்றி மறையாது.
  • புரட்சியின் எழுச்சிமிகுந்த சூறாவளிகள் இந்த நாட்டின் அஸ்திவாரங்களை நீதி ஒளிரும் நாள் வரும்வரை அசைத்துக்கொண்டிருக்கும்.
  • எப்போதும் நாம் கண்ணியம், கட்டுப்பாட்டின் உயர்தளங்களிலிருந்தே நம் போராட்டத்தை நடத்தவேண்டும். நம் போராட்டத்தை வன்முறைத் தாக்குதலாகக் கீழிறக்க அனுமதிக்கக் கூடாது.
  • நாம் உன்னத உயரங்களை நோக்கி எழ வேண்டும்.
நாம் தனித்து நடக்க இயலாது.
நாம் நடந்துகொண்டிருகையில் எப்போதும் முன்நோக்கி நடக்க உறுதிகொள்ளவோம்.
நாம் திரும்பிச் செல்ல இயலாது.
  • “வெள்ளையர்களுக்கு மட்டும்” எனும் அறிவிப்புப் பலகை ஒன்று நம் குழந்தைகளின் சுய மரியாதையையும் கண்ணியத்தையும் தகர்த்தெறிந்து கொண்டிருக்கும்வரைக்கும் நம்மால் திருப்தியடைய முடியாது.
  • வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும் ஒர் இறங்குமுக சுருள். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. குமுகத்தை அழிக்கிறது. சகோதரத்துவத்தை ஏலாமல் செய்கிறது. சமூகத்தை உரையாடலில் அல்லாமல் தன்னுரையில் விடுகிறது. தப்பிப்பிழைத்தவர்களிடம் கசப்புத்தன்மையையும் அழித்தவர்களிடம் கொடூரத்தையும் உருவாக்கின்றது.[1]
  • நண்பர்களே, நம்பிக்கையின்மையின் பள்ளத்தாக்கில் நாம் சேற்றில் உழலவேண்டாம்.
  • இருள் எப்போதும் இருட்டை நீக்காது, ஒளிதான் இருட்டை நீக்கும். வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பால்தான் வெறுப்பை அழிக்க முடியும்.
  • வளைந்திருக்காத முதுகின் மீது யாராலும் சவாரி செய்ய முடியாது.

பிற இனைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மார்டின்_லூதர்_கிங்&oldid=10963" இலிருந்து மீள்விக்கப்பட்டது