மாதவையா கிருட்டிணன்

மாதவையா கிருட்டிணன் (M. Krishnan - மா.கிருஷ்ணன் - 30 சூன் 1912 - 18 பெப்ருவரி 1996), ஒரு முன்னோடி வனவுயிரிப் புகைப்படக் கலைஞராகவும், இயற்கை ஆர்வலராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர்.

மேற்கோள்கள்

தொகு
  • காட்டுயிர்கள் மனிதரின் பொழுதுபோக்கிற்க்கானவை அல்ல.
  • ஒலியின் வேகத்தை மிஞ்சி பறக்கும் ஜெட் விமானம் எனக்கு மலைப்பைத் தருவது இல்லை. ஆனால், கிளைகளின் மீது துள்ளி ஓடும் அணிலும், பரந்த நிலத்தில் பஞ்சாய்ப் பறக்கும் வெளிமானையும் நான் வியந்து பார்ப்பது உண்டு.
  • ஒரு வேட்டைக்காரனைப் பற்றிக் கூறியது.
"அவரும் காட்டுயிர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்டவர். அதனால்தான், விலங்குகளின் தலையைப் பாடம் செய்து சுவற்றில் மாட்டிப் பாதுகாக்கிறார்.
  • ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்கு உட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப் புற உருவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படையினையுமே சார்ந்துள்ளது.
  • இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் தான் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்களாகக் கருதுகிறோம்.

பிற இணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மாதவையா_கிருட்டிணன்&oldid=7984" இலிருந்து மீள்விக்கப்பட்டது