மஹ்மூத் தார்விஷ்
பாலத்தீனிய எழுத்தாளர்
மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) ஒரு பாலஸ்தீனக் கவிஞர் ஆவார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உலக அளவில் இவரது கவிதைகள் பெரும் புகழ் பெற்றவை.
தமிழில் தார்விஷ் கவிதைகள்
தொகுஇவருடைய பல கவிதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. 'பாலஸ்தீனக் கவிதைகள்', 'மண்ணும் சொல்லும்' ஆகிய தமிழ்ப் புத்தகங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. உயிர்மை பதிப்பகத்தினுடைய "நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்" என்ற நூலில் தர்வீஷினுடைய கவிதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும்.
- அச்சம் கொள் எனது பசியைக் கண்டு, அச்சம் கொள் எனது சினத்தைக் கண்டு.[1]
- கோபத்தில் சுழலும் இந்த மண்ணில் பொறுமையைக் கடைபிடிப்பவன் நான்.[1]
- நான் பசியால் துடிக்கும் போது எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை விழுங்குபவன் நான்.[1]
- மட்டுப்படுத்தவே முடியாத பாடலின் லயமொன்று எம்மிடம் உண்டு : அது எமது நம்பிக்கை. விடுதலையிலும் சுதந்திரத்திலுமான நம்பிக்கை. நாங்கள் வீரர்களாகவோ பலியாட்களாகவே இல்லாத எளிய வாழ்வு குறித்த நம்பிக்கை. எமது குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்றுவருவது குறித்த நம்பிக்கை. மருத்துவமனையில் கர்ப்பிணப் பெண் தன் உயிருள்ள குழந்தையைப் பிரசிவிப்பாள், ராணுவச் சோதனைச் சாவடி முன்னால் ஒரு இறந்த குழந்தையைப் பிரசவிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை. சிவப்பு வண்ணத்தின் அழகை எமது கவிகள் சிந்திய குருதியிலல்ல, ரோஜாவில் காண்பார்கள் எனும் நம்பிக்கை. அன்பும் சமாதானமும் என அர்த்தம் தரும் ஆதாரமான பெயரை இந்த நிலம் எடுத்துக்கொள்ளும் எனும் நம்பிக்கை.