மலையாளப் பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அகரவரிசையில் மலையாளப் பழமொழிகள் தரப்பட்டுள்ளன.
அ
தொகு- அகத்தினழகு முகத்தில் தெரியும்.
- அகப்பட்டால் பன்றி சுரைக்காயும் தின்னும்
- அக்காவின் உடமை அரிசி, தங்கை உடமை தவிடு
- அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது.
- அஞ்சு பெண் கட்டியவன் ஆண்டி
- அஞ்சு வயசில் அண்ணன் தம்பி பத்து வயசில் பங்காளி.
- அஞ்சு விரலும் ஒன்று போல் ஆகுமா?
- அடக்கம் இருந்தால் ஆயுள் முழுமையடையும்,
- அடைமழை விட்டாலும் செடிமழை விடாது.
- அடியாத மாடு பணியாது.
- அடிக்கின்ற கை அணைக்கும்.
- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
- அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் தேனும்.
- அட்டையைப்பிடித்து மெத்தையில் கிடத்தினால் கிடக்குமோ?
- அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும் காணும்.
- அதற்கொரு காலம் இதற்கொரு காலம்
- அதிவேகம் ஆபத்து மிக்கது.
- அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா என்று அழைக்க முடியுமா?
- அத்திபூத்தாற்போல்
- அத்திப்பூவையும் ஆந்தைக்குஞ்சையும்ம் யாரும் கண்டதில்லை
- அந்தியில் வரும் மழை நீளும்.
- அம்பட்டன் செம்பட்டு உடுத்தாலும் அம்பட்டன் தான்.
- அம்பட்டனின் குழந்தைக்கு மயிருக்கு குறைச்சலோ?
- அம்பினால் வராததும் வம்பினால் வரும்.
- அம்மா வயிற்றில் எல்லாவற்றையும் படித்துவந்தவர் யாரும் இல்லை
- அம்மாயின் சாபம், அம்மா இறந்தாலும் அழியாது.
- அம்மாவின் பாசத்திற்கு அளவில்லை
- அரைக் குடம் கூத்தாடும்.
- அரசன் அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்.
- அரசனில்லா நாடு நரகம்.
- அரசன் வீழ்ந்தால் படையில்லை.
- அரைச்சாண் கடித்தால் ஒருசாண் வளரும்.
- அரணை கடிச்சால் உடனே மரணம்.
- அரையடிமண்ணில் ஆயிரம் பாம்பு.
- அற்ப லாபம் பெருஞ்சேதம்.
- அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
- அவலினை நினைத்து உரலை இடி,
- அளக்கின்ற நாழி, அரிசியின் விலை அறியுமோ?
- அழகுள்ள பலாப் பழத்தில் சுளையில்லை.
- அறிந்தவனுடன் பேசு, அறியாதவனுடன் பேசாதே
ஆ
தொகு- அந்தக் காட்டிற்கு அந்த குரங்கு எனில், இந்த காட்டிற்கு இந்த குரங்கு
- ஆகாயம் வீழுமென்ற நிலை வந்தாலும் யாரேனும் முட்டுகொடுக்க முடியுமா?
- ஆடு அங்காடி வாணிபம்.அறியுமோ?
- ஆடிக்காற்றில் யானையும் பறக்கும்,
- ஆட்டை நாயென சொல்லுக.
- ஆடிய காலும் பாடிய வாயும் அடங்கி இருக்காது.
- ஆடு கால் பணம் பிடுக்கு முக்கால் பணம்.
- ஆடு பிடிக்கச் சென்றால் கரடி அகப்படுகிறது.
- ஆடு மேய்ந்த காடு போல்
- ஆட்டின் தோல் போர்த்திய நாயைப் போலே
- ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் சாமிக்கு மூன்று கொம்பு
- ஆட்டைப் பிடித்து, மாட்டைப் பிடித்து மனிதனைப் பிடிக்கிறாயே
- ஆணாகப் பிறந்தவனுக்கு பெண் வேண்டும்.
- ஆணிற்கு அடங்காத பெண்ணில்லை
- ஆணை அடித்து வளர்க்க வேண்டும், பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும்.
- ஆணுக்கு ஒரு வீடு பெண்ணுக்கு இரண்டு வீடுகள்
- ஆணும் பெண்ணும் நெய்யும் தீயும்.
- ஆண்டிச்சி பெற்றதஞ்சும் குரங்கு
- ஆபத்தில் பாவமில்ல.
- ஆபத்துகாலத்தில் அரைஞாண் சரடும் பாம்பாகும்.
- ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
- ஆயிரம் அம்பட்டக்கத்தியைச் சேர்த்தாலும் ஒரு மரத்தை வெட்ட முடியாது
- ஆயிரம் உள்ளவர் அமந்திருப்பார், அரைப் பணம் உள்ளவர் ஆடித்துள்ளுவார்.
- ஆயிரம் கண்களை பொட்டையாக்குபவனே அரை வைத்தியன்
- ஆயிரம் வந்தாலும் ஆயிரம் போனாலும் எனக்கொன்றும் இல்லை.
- ஆயிரம் குதிரையை வேட்டையாடினாலும் வீரன், மரப்பட்டியோடு புதைக்கப்படுவான்.
- ஆயிரம் பணம் போனாலும் போகட்டும், மன அமைதியே முக்கியம்
- ஆயிரம் பாடல்கள் படித்தவன் அரைக்கவி.
- ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு.
- ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
- ஆள் பாதி, ஆடை பாதி.
- ஆள் மாறி கலப்பப் பிடித்தாலும் காளை உழும்.
- ஆளுக்கு ஆள் போல், மரத்திற்கு வேர்
- ஆழத்தில் உழுது அகலத்தில் நடுக.
- ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்காதே
- ஆழமுள்ள கிணற்றிற்கு நீளமுள்ள கயறு
- ஆறிய கஞ்சி, பழங்கஞ்சி.
- ஆறிலும் மரணம் நூறிலும் மரணம்.
- ஆறு நாட்டில் நூறு மொழிகள்
- ஆறும் அறுபதும் ஒரு போலெ.
- ஆட்கள் கூடினால் பாம்பிற்கு சாவில்லை.
- பலர் கூடி உடிவெடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் இருக்கும். ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வரும். ஒரே முடிவை எடுப்பது கடினம் என்பது இதன் பொருள்.
இ
தொகு- இக்கஞ்சிக்கு இச்சம்மந்தி.
- இக்கரையில் நின்றால் அக்கரைப் பச்சை.
- இங்கிதம் அறியாதவர்க்கு சங்கீதம் அறிந்து ஆகப் போவது ஒன்றுமில்லை.
- இஞ்சி தின்ற குரங்கினைப் போல்.
- இடது கைக்கு துணை வலது கை.
- இடங்கொடுத்தால் மடம் பிடுங்கும்.
- இடிவெட்டிய மரம் போல்.
- இட்டது சட்டம்.
- இணங்கிய பறவை கூட்டில், இணங்காத பறவை காட்டில்.
- இனம் இனத்தோடு குலம் குலத்தோடு.
- இன்று சிரிப்பவன், நாளை அழுவான்
- இன்று நான் நாளை நீ.
- இன்று எனக்கு, நாளை உனக்கு
- இரையிட்டால் மீன் சிக்கும்
- இரவல் புடவையைக் காட்டிலும் பழந்துணியே மேல்
- இருதோணியில் கால் வைத்தால் ஆற்றின் நடுவில் விழும் நிலை வரும்
- இருமுலைக்கு இடையில் பெரும் லோகம்.
- இரும்பு பழுத்திருக்கும் போது அடிக்க வேண்டும்.
- இருள் ஒருகாலம் வெளிச்சம் ஒருகாலம்.
- இல்லம் நிரை, வல்லம் நிறை, பத்தாயம் நிறை, வயறு நிறை
- இல்லாமையும் வல்லாமையும் எல்லார்க்கும் வரும்.
- இள நாய் கடி அறியுமோ, இளம்போத்து வெட்டு றியுமோ?
ஈ
தொகு- ஈர் எடுத்ததின் கூலி பேன்.
உ
தொகு- உடுதுணிக்கு மறுதுணியில்லை.
- உடுத்தியிருக்கும் துணிக்கு வேறு துணியில்லாதவர் ஏழை.
- உண்ட சோற்றிற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
- உண்ணியை கண்டால் ஊரையே அறியலாம்.
- ஒராளைக் கண்டாலே, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி அறியலாம்.
ஏ
தொகு- ஏட்டில் உள்ள புல்லை பசு தின்னாது.
- நூலறிவால் விளைவது எதுவுமில்லை. உலக அறிவே முதன்மையானது
க
தொகு- கஞ்சி தராமல் கொன்றுவிட்டு, இறந்தபின்னர் பால்பாயசம் படைத்தல்
- வாழும் வரை மதிக்காமல் இருந்துவிட்டு இறந்தபின்னர், படையல் இட்டு வழிபடுதல்
- கரைகின்ற குஞ்சே பால் குடிக்கும்
- தேவை இருக்கும் போது கேட்டுப் பெறுபவனே அறிவாளி.
- காற்றுள்ளப்போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
- குருடர்கள் யானையைக் கண்டதைப் போல்
- ஒன்றைப் பற்றி அறியாமலேயே பல கருத்துகளைக் கூறுவதைக் குறிக்கிறது.
த
தொகு- தாழ்ந்த நிலத்தில் நீரோடும்.
- பணிவுடன் இருப்பவர்க்கே உயர்வும் நன்மையும் வரும்.
- தொடருக, தொட்டால் விடாதே.
- ஏதாவது ஒரு செயலை தொடங்கினால் முடியும் வரை கவனம் இருக்க வேண்டும்.
- தானம் கிட்டிய பசுவின் வாயைப் பார்க்காதே
ந
தொகு- நாயின் வால் பன்னிராண்டு காலம் நிமிர்த்தினாலும் வளைந்தே இருக்கும்.
ப
தொகு- பெண்புத்தி பின்புத்தி.
- பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லாதே
வ
தொகு- வந்த வழியை மறக்காதே
- செல்வ வளம் பெருகிய பின்னர், பழைய கால வாழ்க்கையை மறக்கக் கூடாது.
- வேலி தாண்டிய பசுவிற்கு கோலால் மரணம்
- தவறான வழியில் சென்றால் ஆபத்து நேரிடும்.