மரியாதை (Respect) என்பது ஒரு நேர்மறையான உணர்வு, செயல் ஆகும். இது ஒரு நல்ல குணமாக போற்றபடுகிறது. ஒருவரின் தேவைகள் அல்லது உணர்வுகளை கவனித்தல், அக்கறை காட்டுதல் அல்லது கருத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களை கௌரவிக்கும் செயல்முறையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • மரியாதை எல்லா மனிதர்களின் அன்பையும் கவரக்கூடிய ஆற்றலுள்ளது: அதில் சொற்பமாயில்லாமல், அதிகமாயிருப்பதே நல்லது. - பிஷப் ஹார்ன்[1]
  • மரியாதையாகப் பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள். - செர்வாண்டிஸ்[1]
  • உன்னை ஒருவர் வணங்கினால், அவனைவிட அதிகமாகப் பணிவோடு நீயும் வணங்கு அல்லது அதே அளவாவது திருப்பிச் செய். ஏனெனில், ஆண்டவன் எல்லா விஷயங்களையும் கவனிக்கிறான். - குர்ஆன்[1]
  • சிறு மரியாதைகள் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. பெரிய மரியாதைகள் அதை மிகவும் சிறப்படையச் செய்கின்றன. - போவீ[1]
  • மரியாதை காட்டுதல் முதன்மையாக முக்கியமுள்ள ஒரு கலை. உடலின் அழகும் எழிலும் பார்த்தவுடன எப்படி ஒருவரைக் கவர்ந்து, பிறகு அந்தரங்கத் தோழமை கொள்ள உதவு கின்றனவோ, அதே போன்றது மரியாதையும். - மாண்டெயின்[1]
  • நம்முடைய நடத்தை நம்மினும் உயர்ந்தோர் தாழ்ந்தோர். நமக்குச் சமமானவர் ஆகிய மூன்று வகையான மக்களிடத்திலும் பொருத்தமாக இருக்கும்படி அமையவேண்டும் இது நற்பயிற்சியில் முக்கியமான ஒரு விஷயம். - ஸ்விஃப்ட்[1]
  • நற்பயிற்சியில்லாத அறிஞன் தற்பெருமைக்காரனாக இருப்பான். தத்துவ ஞானி குறை சொல்லிக்கொண்டேயிருப்பான். போர் வீரன் வெறும் முரடனாயிருப்பான். அது இல்லாத ஒவ்வொருவனும் வெறுக்கததககவனாயிருப்பான். - செஸ்டர்ஃபீல்டு[1]
  • மரியாதைக்கு விலையில்லை. ஆனால், அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடுகின்றது. - மாண்டேகு சீமாட்டி[1]
  • நல்ல பயிற்சியுள்ள மனிதன் எப்பொழுதும் பழகுவதற்கு இனியன். - மாண்டெயின்[1]
  • நடை, உடை, பாவனைகள் சட்டங்களைவிட வல்லமை உள்ளவை. - ஏ. கார்லைல்[1]
  • அமைதி ஆத்திரமோ ஆவேசமோ இல்லாமை ஆகிய இவை நேர்த்தியான பண்புகளைக் காட்டும்; கனவான் ஓசையுண்டாக்க மாட்டான். சீமாட்டி சாந்தமாயிருப்பாள். - எமர்சன்[1]
  • ஒவ்வொருவருடைய உடலுக்கும், புத்திக்கும் தக்கபடி ஒரு நடத்தை அமைந்திருக்கும். நாம் மற்றவருடைய நடத்தையைப் பார்த்து நடக்கத் தொடங்கினல், அது போய்விடும். - ரூஸோ[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 297-298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மரியாதை&oldid=35487" இலிருந்து மீள்விக்கப்பட்டது