மரண தண்டனை
மரண தண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் அல்லது அரசு தனது நடவடிக்கைகளின் ஊடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- முதலில் மரண தண்டனைக்குரிய குற்றங்கள் என்பவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் எந்த வித முறையிலாவது விதிக்கப்படும் மரணதண்டனையில் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கு வெவ்வேறு அளவு கோல்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்க முடியாது.
மரண தண்டனைக்கு எதிரானவை
தொகு- வாழ்க்கை புனிதமானது. அதை பறிப்பது அரக்கத்தனமானது.
- ~ வி. ஆர். கிருஷ்ண ஐயர் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி
- மரண தண்டனை விதிப்பதில் நிலையான வரைமுறையை உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்ததே இல்லை.
- ~"அஜீத்ஷா" ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி
- மரண தண்டனையால் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளனவா அதிகரிக்கின்றனவா, அல்லது எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லையா என்று கணிக்கவே முடிவதில்லை.
- ~ தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பரவலாக மக்களிடையே பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும், அபிப்ராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்துத் தண்டனைக் குறைப்பைத் தருவதில் தவறு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும், சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்துக்கு நன்மையைவிட தீமையே வந்து சேரும்.
- ~ சட்டக் கமிஷன், இந்தியா
- குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.[1]
- தனிநபரின் உடலுக்கு புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் அரசியல் சமூகத்திற்கு மரண தண்டனையும்.[1]
- மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல, அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.[1]
- மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை, எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன்.[1]
- மரண தண்டனை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை நான் மறுக்கிறேன். அந்தத் தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.[1]
கு. அழகர்சாமி
தொகு- மரண தண்டனை என்பது நீதியினுடைய கருநிழல்.
- மரண தண்டனையின் (தூக்கு போன்றதின்) குரூரம் அது நிறைவேற்றப்படும் முறையில் மட்டுமல்ல. குற்றவயப்பட்ட தனி மனிதனின் மீட்சிக்கான வாய்ப்பினை அது முற்றிலும் நிராகரிப்பதில் தான்.
- மரண தண்டனையில் ஒரு வேளை நீதிப் பிறழ்வு ஏற்பட்டால் அது பொறுப்பேற்காதது தான். பொறுப்பேற்க தயாராயிருந்தாலும் அதில் எந்தப் பின்விளைவும் இல்லை(inconsequential) என்பது தான்.
- தூக்குக் கயிற்றை இறுக்காதே. அவிழ்த்து விடு, மனிதம் மூச்சு விடட்டும்.
- மரண தண்டனை தடை செய்யப்படாது சட்டச் செயல்பாட்டில் இருக்கும் வரை, நீதியின் கரு நிழல் நீங்காது தொடரும்.[2]
மரண தண்டனைக்கு ஆதரவானவை
தொகு- ஒரு மனிதன் சமூகத்துக்கு ஆபத்தானவனாக இருக்கிறான், பாவத்தைச் செய்கிறான் என்றால் சமூகத்தின் நன்மையைக் கருதி அவனைக் கொன்றுவிட வேண்டும்.
சான்றுகள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு
- Famous Quotes about Death Penalty and Capital Punishment
- Anti-Death Penalty Quotes - compilation of abolitionist quotes