மது
உலக இராணுவம் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல அதிகமானவரைக் கொல்லமுடியாது
- பேகன்
முட்டாளுடன் நட்பு கொள்வதும் குடித்தவரிடம் விவாதிப்பதும் வீணே
- கலீல் கிப்ரன்
மது உபயோகம் அடியோடு ஒழிக்கபட்டால்தான் மக்கள் மனமகிழ்ச்சியோடு வாழலாம்
- மில்டன்
அறிஞன் கூடமூடர்களுடன் சேர்ந்தால் மது பழகுகிறான்
- கமிங்வே
எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது
- அயன் ரான்ட்
மதுவை விட உழைப்பு என்பதே ஒயாத கவலைகளுக்கு நல்ல மருந்து
- எமர்சன்
நல்லதை பழகுவது கடினம் தீயதை மறப்பது கடினம்
- மொகட்டா
முதலில் சிலந்தி நூல் போல பின்னி இறுதியில் தூக்கு கயிறாகும்
- கோபர்ட்
செல்வத்தை விட ஏன் வாழ்வை விட சிலர் தனது மதுவை நேசித்து அழிகிறார்
- ரஸ்ஸல்
இது நாள் வரை நான் மதுவை அருந்தியதே இல்லை ஆனல் என்னைப் பொருத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால்தான் எதுவுமே கெடுதலே தவிர அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை.
கள் குடித்தவனுக்குத் தாய் என்றும் மனைவி என்றுமுள்ள வேற்றுமை தோன்றாது. ஆதலால் அறிவைக் கெடுக்கும் கள்ளை அறவே விட்டு விடுங்கள். நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள் மூவகைப்படும். அவற்றுள் தாமச போஜனத்துடன் சேர்க்கப்பட்டுச் சோம்பல், அறியாமை முதலிய தீய ஒழுக்கத்தை உண்டு பண்ணும் மதுபானத்தை விலக்குங்கள்.
- சுவாமி சகஜானந்தா (8-4-1928) (கழனிவாசல் ஆதி திராவிட பாடசாலையின் முதலாண்டு விழாக் கூட்டத்தில்)[2]
குறிப்புகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.