மணிவண்ணன்

நடிகர், இயக்குனர்

மணிவண்ணன் (சூலை 31, 1954 - சூன் 15, 2013[1] தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

நபர் குறித்த மேற்கோள்கள் தொகு

  • "நாவல் எழுதுவது போல், திரைப்படமாக்கப் போகும் கதையை முதலில் மொத்தமாக எழுதி விடுவார். சந்தேகம் வரும்போது மட்டும் அதைச் சரிபார்த்துக் கொள்வார். மற்றபடி வசனம், இவரைப் பொறுத்தமட்டில் குற்றால அருவிபோல வந்து விழுந்துகொண்டே இருக்கும்!" - மணிவண்ணனைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]
  • "ஒரு லொகேஷனைப் பார்க்கும்போதே, மனத்திலுள்ள காட்சியை இங்கு எப்படிப் படமாக்கலாம் என்பது பற்றி, பளிச்சென்று முடிவு செய்துவிடுவார். ஒரு ஸ்பாட்டில் நின்றுகொண்டு காமிராவை எங்கு வைக்கலாம், எப்படி ஷாட்டை எடுக்கலாம் என்ற விஷயங்களில் மணிவண்ணன் திணறி நான் பார்த்ததே இல்லை." - மணிவண்ணனைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள் தொகு

  1. இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்
  2. 2.0 2.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 402-404. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மணிவண்ணன்&oldid=12725" இலிருந்து மீள்விக்கப்பட்டது