மக்களாட்சி

மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறையை கூறினார்.

  • ஜனநாயகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், அது சரித்திரத்தில் மிகப் புராதனமான போக்கு. மிகவும் நிலையானது. பெரும்பாலோர் வேற்றுமையின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியது. -டி. டாக்புவில்லி[1]
  • சைத்தான் முதல் ஜனநாயகவாதி. -பைரன்[1]
  • அமெரிக்காவின் உண்மையான ஜனநாயகக் கருத்து என்ன வெனில், ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரைப் போலச் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பெற்ற நிலையில் இருப்பதற்குத் தடையற்ற சுதந்தரம் இருக்கவேண்டும் என்பதே. - பீச்சர்[1]
  • பூரண அரசியல் ஜனநாயகம் என்பதன் பொருள் பொருளாதார ஜனநாயகமாக வளர்ச்சியடைதல் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். -ஜவஹர்லால் நேரு[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மக்களாட்சி&oldid=21297" இலிருந்து மீள்விக்கப்பட்டது