மகாவீர்
மகாவீர் (கிமு 599 - கிமு 527) எனப்படுபவர் ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- மன்னிப்பதால் மனம் தெளிவடைகின்றது.
- வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்தவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும்.
- உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.
- எவனொருவன் யோசித்து, பின் அழகான, மிதமான வார்த்தைகளை பேசுகின்றானோ அவனே பெரியோர்களின் மதிப்பை பெறுகின்றான்.
- புத்திசாலி, தெளிவு பெற்றவுடன் அடக்கமுடையவன் ஆகின்றான்.
- நல்ல பணிகளுக்கு ஆணி வேர் பணிவு தான்.
- தவறு ஏற்படாதவாறு நடப்பவன் புத்திசாலி.
- பயங்கொண்ட மனிதனால் பிறருக்கு உதவ இயலாது.
- உலகில் கோழையாக மட்டும் இருக்காதே.
- மகிழ்ச்சியான சொற்கள் விருப்பத்தை ஏற்படுத்தும்; மற்ற சொற்கள் பகை உணர்ச்சியை தூண்டும்.