போற்றுதல்

சமூக உணர்வு

போற்றுதல் (Admiration) என்பது ஒருவரின் செயல்களில் மகிழ்ச்சியடைந்து அவரை விரும்பி புகழ்வது ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • நம்மை மெச்சுவாரையேயன்றி நாம் மெச்சுவாரை நாம் ஒருபொழுதும் நேசிப்பதில்லை. -ரோஷிவக்கல்டு[1]
  • பிறன் ஒருவனை அவன் விரும்பும் வண்ணம் மதித்தல் கடினமான காரியம். - வாவனார்கூஸ்[1]
  • யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின் சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர் அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது. -மார்லி[1]
  • உன் தகுதி பிறர்க்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அங்கீகாரம் செய்க. -பழமொழி[1]
  • பிறருடைய உத்தமச் செயல்களை மனமுவந்து போற்றுதல் அவைகளை ஒரளவு நமக்கும் சொந்தமாக்கிக் கொள்வதாகும். -ரோஷிவக்கல்டு[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/போற்றுதல். நூல் 91- 92. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=போற்றுதல்&oldid=20090" இலிருந்து மீள்விக்கப்பட்டது